பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 நெஞ்சுக்கு நீதி சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். கௌகத்தி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையினிடையே எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமையும் என்பது குறித்து அறிவித்துள்ள கருத்து அனைவரும் அறிந்ததேயாகும். என்ன என்பதை அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் நிலை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் இயல்பேயாகும் சுமுக மானதுமான நாடு எதிர்நோக்கும் இயல்பானதும், சூழ்நிலை விரைவில் உருவாகாதா?" என்று நாட்டின் எதிர்கால நல்வாழ்விலே நாட்ட முள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களது போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டு மென்றும், இந்திய நாட்டின் வலிவையும் வளத்தையும் வளர்த்துப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க முன்வரவேண்டு மென்றும் அப்போதுதான் பேச்சுவார்த்தைக்குப் பொருள் இருக்க முடியுமென்றும் பிரதமர் கூறியுள்ளார். "பேச்சுவார்த்தை தொடங்குவதென்றால்நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறவேண்டும்." சில எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து இப்படி ஒரு கருத்தும் எடுத்து வைக்கப்படுகிறது. நிபந்தனைகள், இருதரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு அவை களை இரு தரப்பாரும் நிறைவேற்ற உடன் பட்ட பிறகே பேச்சு வார்த்தைக்கு இணங்க முடியுமென்று வாதிப்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்தாகும். மீண்டும் சகிப்புத் தன்மையுடன் மனம் விட்டுப் பேசி நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற் கொண்டு நமது பணிகளை வகுத்துக் கொள்வதே சிறப்புடைய தாகுமென, நான் சார்ந்துள்ள தி. மு. கழகம் எண்ணுகிறது. பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட வாய்ப்பு கிட்டுமே யானால் அதன் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித் தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டு விட்டு அரசாங்கக் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் 'ஆமாம்' போடுகிறவைகளாக ஆகவேண்டு மென்று நினைத்துப் பார்ப்பதற்குக்கூட இடமில்லை.