பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 577 அதே நேரத்தில் இந்தியாவின் வலிவுக்கும், வளத்துக்கும் கேடு ஏற்பட வேண்டுமென்று எண்ணுகின்ற யாரும் இங்கில்லை. ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு நிலைமைகளை மறு பரிசீலனை செய்வதற்கான சிந்தனையும் ஆர்வமும் எழுந்திருப்பது இருதரப்பாரின் சார்பில் நாட்டின் நல்லதோர் எதிர்காலத்திற் கான உத்திரவாதத்தை அளிக்குமென்றே நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்திருக்கிறது என்றே கூறவேண்டும். அந்தக் குறிக்கோளுடன் செயல் முறைகளை வகுப்பதற்கே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இதில் தனிப்பட்ட கட்சிகளின் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இடமில்லை. அனைவரும் ஏற்றிடத் தக்க ஒரு பொதுவான உடன்பாடு நமக்குள்ளே ஏற்படுவதற்கு இந்தக் கூட்டம் வகை செய்யும், துணை புரியும் என்று நான் நம்புகிறேன்." என்னுடைய வரவேற்புரைக்குப் பிறகு அனைத்துக் கட்சி களின் தலைவர்களெல்லாம் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள், அந்தக் கூட்டம் மாலை 4 மணி வரை நடை பெற்றது. நிலைமையை இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடக்கக்கூடிய எத்தகைய பேச்சிலும் மகிழ்ச்சி யுடன் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து மறு நாள் 16 - 12 - 76 அன்று மீண்டும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு எச். எம். படேல் எம். பி. அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு அசோக்மேத்தா அவர்களும் பிலுமோடி அவர்களும் என்னை டெல்லியிலே சந்தித்து உரையாடினார்கள். 1976 -ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் டெல்லியிலே கூட்டப்பட்ட அந்த அனைத்துக் கட்சி (எதிர்க் கட்சிகள்) கூட்டம் தான் ஜனதா கட்சி இந்திய அரசியலும் உருவாக முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. டெல்லியிலே நடைபெற்ற அந்தக் கூட்டம் குறித்து 16- ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலே குல்தீப் நய்யார்