பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 நெஞ்சுக்கு நீதி சிறைச்சாலையில் சிட்டிபாபு மிருகத்தனமாகத் தாக்கப் பட்டது உண்மையா? இல்லையா? முன்பே அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் என்று அரசாங்க அறிக்கை கூறுகிறது. அத்தகைய நோயாளி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படக் காரணம் என்ன? அத்தகைய நோயாளி மூர்க்கத் தனமாகத் தாக்கப்பட்டது ஏன்? பொது மருத்துவமனைக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற அனுப்பப்பட வேண்டுமென்று அவர் கேட்டதுண்டா? இல்லையா? எப்போது அவரை முதல் தடவையாக வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற பொது மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்? அதற்கு இடைப்பட்ட நாட்கள் எத்தனை? உடனடியாக அவர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் காலங்கடந்து அனுப்பியதன் காரணம் என்ன? இதுபோன்ற முரசொலி மாறனின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறையில் பிணமாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமா? இந்தியா முழுமையும் சிறைச்சாலைகளில் இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சிக் கொடுமை யால் எத்தனை சித்திரவதைகள்! ஒரு சில அரசியல் கைதிகளை சிறைக் கோட்டத்தில் நாள் முழுவதும் பனிக்கட்டியில் படுக்க வைத்தனர். சிநேகலதா என்ற பெண்மணிக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லவே குலைநடுங்குகிறது. அரியானா மாநிலத்தில் ஒரு போலீஸ் லாக்அப்பில் எமர்ஜன்சியை எதிர்த்த குற்றத்திற்காக அண்ணனையும் அவன் தங்கையையும் நிர்வாணமாக்கி போலீசார் எதிரிலேயே அவர்களை உடலுறவு கொள்ளச் செய்யு மாறு வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி-அவர்களது மர்ம உறுப்புக் களில் மிளகாய்ப் பொடியையும் தூவினார்கள். இப்படி நாச நர்த்தனமாடிய நெருக்கடி நிலையின் வெறிப்பற்களின் தினவு சற்று அடங்கியதற்கு அடையாளமாகத்தான் 1977 ஜனவரி 18-ஆம் நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, "நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்" என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்டவாறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.