பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 583 1. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை விரைவுபடுத்தவேண்டும். அத்துடன் இந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகளின்கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை மறு ஆய்வு செய்யவேண்டும். நடவடிக்கைகளுக்காகவும் 2. சகஜமான அரசியல் தேர்தல் காரியங்களுக்காகவும் பொதுக்கூட்டங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும். 3. நபர்கள், வாகனங்கள் நடமாட்டம் மீதான கட்டுப் பாடு, பாதகமான செயல்களுக்கு தண்டனை விதிப்பது, பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய விஷயங்களின்கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை வாபஸ் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தவிர மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்த வி.சி.சுக்லா விடுத்த அறிவிப்பில் "அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மக்களிடம் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்குத் தேவையான எல்லா நியாயமான நடவடிக்கைகளையும் அனுமதிப்பதே அரசின் நோக்கம் என்று பிரதமர் தனது வானொலி உரையில் அறிவித்தார். பத்திரிகைகள் அதற்கான சாதனங்களில் ஒன்று. பிரதமர் கூறிய அந்த உறுதி மொழிக்கு இணங்க செய்தித் தணிக்கை உத்தரவை அமல்படுத்துவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத நான்கு பெரிய எதிர்க்கட்சி களான பழைய காங்கிரஸ், பாரதீய லோக்தளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பொதுப்பெயரில் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்ப தாக மொரார்ஜி தேசாய் அறிவித்தார். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்புகளுக்குப்பிறகும் தமிழ்நாட்டில் கைது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வில்லை. எனவே நானும் ராஜாராமும் கவர்னர் சுகாதியா அவர்களைச் சந்தித்து மத்திய அரசு உத்தரவிற்குப் பிறகும் தமிழகத்தில் இன்னும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வில்லை என்பதை அறிவித்தோம். அதன்பிறகு ஜனவரி 23-ஆம் நாள் தொடங்கி, படிப்படி யாக பிப்ரவரி 2-ஆம் நாள் முடிய கழகத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.