பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெஞ்சுக்கு கீதி [41 எதை உதாரணமாகக் காட்டி இதைச் சொல்லுகிறேன் என்றால் பவுத்த ஸ்தாபன முறையை அனுசரித்து சொல்லு கிறேன். 1. "புத்தம் சரணங் கச்சாமி" 2. "தம்மம் சரணங் கச்சாமி" 3. "சங்கம் சரணங் கச்சாமி." பொருள்: புத்தனுக்கு (தலைவனுக்கு) வணக்கம். தம்மம் - கொள்கைக்கு வணக்கம். சங்கம் - ஸ்தாபனத்துக்கு வணக்கம். இம்மூன்றும் முறைப்படி இல்லாதவர் யாராய் இருந்தா லும் அவர் பவுத்தர் அல்ல. அதாவது ஸ்தாபனத்திற்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதுதான் பொருள். ஆகும்? அந்த நிலை ஏற்பட்டால் தமிழன் கதி என்ன பழிவாங்கும் படலம் தானே? வேறு யார் பதவிக்கு வந்தாலும் ஆட்சி கைப்பற்றப்பட்டாலும் நடைபெறும். ஆகவே இன்று தி. மு. க. வில் தலைவரை மதிக்காதவர் கள். நாளை தங்கள் மதிப்பையே இழந்துகொள்ளும் செயலில் ஈடுபட்ட வராவார்கள் என்பதை நினைப்பூட்டவே இதை எழுது கிறேன். இவ்வாறு பெரியார் எழுதியதற்கு மறுநாள் பிப்ரவரி 16 தமிழகமெங்கும் அண்ணா நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. நானும் அமைச்சர்களும், கழக முன்னோடிகளும், நிர்வாகிகளும் செயல் வீரர்களும் அமைதி ஊர்வலமாக அண்ணா சதுக்கத் திற்குச் சென்று மலர் வளையம் வைத்தோம். கழகப் பொதுச் செயலாளரான நாவலர் அந்த ஊர்வலத் தில் கலந்துகொள்ளாமல் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாகத் தனியாக ஒரு அமைதி ஊர்வலம் நடத்தினார். ஊடல் தீரவில்லை! ஆனாலும் உணர்வுகள் ஒடுங்கிப்போய் விடவில்லை! அன்று மாலை தியாகராய நகரில் சென்னை மாவட்டச் செயலாளர் நீல நாராயணன் தலைமையில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் கூட்டத்தில் நான் பேசினேன். அந்தப் பேச்சின் சில பகுதிகளை இப்போது நினைவு படுத்துகிறேன்.