பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செஞ்சுக்கு நீதி கலைஞர் கருணாநிதியிடம் எனக்குத் தனிப்பட்ட முறையில் மதிப்பு உண்டு. கலைஞர் அவர்களின் அறிவையும், ஆற்றலையும், உழைப்பை யும் நான் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. கட்சிக்காக கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர் கலைஞர். எனக்குப் பேச - எழுதத்தான் தெரியும். ஆனால் கலைஞர் அவர்களுக்குக் கதை எழுதத் தெரியும் நாடகம் எழுதத் தெரியும் - கவிதை எழுதத் தெரியும்- நடிப்பாற்றலும் உள்ளவர். ஒருமுறை கலைஞர் பிறந்த நாள் விழாவில், நான். கட்டுரை எழுதினேன். அறிவு - ஆற்றலில் - எழுத்து - பேச்சு - நடிப்பு - சினிமா - நாடகம் போன்ற துறைகளில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாகக் கலைஞர்தான் என்று எழுதினேன். கலைஞர் கூட என்ன இப்படி எழுதி விட்டீர்களே என்று கேட்டார். ஆகவே அவருக்கும் எனக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எதிர்க்கட்சிக்காரர்கள் என்னைப் பற்றி எழுதுகிறார்கள் என்றால் கட்சியின் மீதுள்ள நல்ல எண்ணத்திலா எழுதுகிறார்கள்? ஏதாவது பிளவு, சரிவு ஏற்படாதா என்று நினைத்து எழுது கிறார்கள். அந்தப் பத்திரிகைகளைக்கூட நண்பர்கள் வாங்கக் கூடாது. கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம். வேறு சிலரைக் கண்டால் கூட நான் ஒதுங்குவேன். 25 ஆண்டுகளாக நானும் அவரும் ஒருமனதாகவே இருந்து வருகிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு இரண்டு ரூபாய் அனுப்பி என்னைப் பேச அழைத்தவரே கலைஞர் கருணாநிதிதான். நாமும் வெளியூர் சென்று பேசப் போகிறோம் என்று பெருமையுடன் ரயிலில் ஏறி நான் புறப்பட்டதே கலைஞர்