பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நெஞ்சுக்கு நீதி அண்ணாவை இழந்து அழுது அழுது தமிழ் மக்களின் கண்ணீர் வற்றிவிட்டதைப் போலவே - வானத்து முகிற்கூட்ட மும் வடிப்பதற்குக் கண்ணீரின்றிப் புலம்பியதால் வறட்சி துயர் தமிழகத்தைக் கப்பிக்கொண்டது. "மந்திரிசபை விஸ்தரிப்பு பற்றித் தயக்கம் காட்டிக்கொண் டிருக்காமல் விரைவாக முடிவெடுத்த முதலமைச்சர் கருணாநிதி யைப் பாராட்டுகிறேன். விரைவான முடிவுகளை எடுக்கக் கூடிய வர் எனக் கருதப்படுகிறவர் தற்போதைய முதலமைச்சர். மந்திரி சபை விஸ்தரிப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் அதை உறுதிப்படுத்துகிறது. இனி அரசாங்கம் எடுக்கப்போகும் முடிவு களும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையு மென்று நம்புகிறேன்." இவ்வாறு முன்னால் முதல்வர் பெரியவர் பக்தவச்சலம் அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 15-ஆம் நாளுக்குள் அமைச்சரவை அமைப்பு முழுமை பெற்றுவிட்டதும், பிப்ரவரி 17-ஆம் நாள் அதிகாரிகளும், அமைச்சர்களும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, வறட்சித் துயர் தணிப்புக் காரியங்களை உடனடியாகத் தொடங்கிட ஒரு கோடியே ஐம்பத்தி ஏழு லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பிப்ரவரி 21 -ஆம் நாள் சட்டமன்றம் கூட்டப்பெற்றது. முதல் நாள் அண்ணா மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்துடன் மறுநாளைக்கு மன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 22-ல் புலவர் கோவிந்தன் அவர்கள் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றையும் ஆய்வு செய்து நூல்கள் பலவற்றை வெளியிட்டவரும், இயக்கத்தில் இரண்டறக் கலந்து தமிழகப் பண்பாட்டினையும், தமிழ் உணர்வினையும் பரப்பிடத் தொடர்ந்து பணியாற்றுகிறவருமான ஒரு புலவர் பெருமகன் சட்டப்பேரவையின் தலைவராக அமர்ந்தது தனிச் சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்தது. முதல் சட்டமன்றத் தொடர் கூட்டத்திலேயே தமிழக வறட்சி நிலை குறித்து விவாதிக்கப்பட்டு, மத்திய அரசின் உதவியை வலியுறுத்தி அரசின் சார்பிலேயே தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்த நான்: "இருந்த போது கொடுத் தோம், அது எமது கடமை ; இல்லாத போது கேட்கிறோம். இது எமது உரிமை!" என்று குறிப்பிட்டேன். போர்க்கால