பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்குநீதி51 நடவடிக்கை போல வறட்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்ட விபரங்கள் பேரவை, மேலவைகளில் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவிலும், தமிழகத்திலும் அண்ணாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான செலவினங்களை அரசாங்கம் ஏற்பது தவறில்லை என்ற வாதத்தை அண்ணா ஏற்றுக் கொள்ளவில்லை. கழகச் சார்பில் நிதி வசூலித்து அதனை அரசுக்குச் செலுத்திவிட வேண்டுமென்று அண்ணா அப்போதே எனக்குக் கட்டளை யிட்டிருந்தார். அதனை நிறைவேற்றும் நிறைவேற்றும் வகையில் தலைமைக் கழகச் சார்பில் அரசுக்குச் செலுத்தப்பட்ட தொகை குறித்த கணக்கு விபரங்களைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கருத்திருமன் அவர்கள் கேட்டார்கள். களை நூலகம், களை நூலகம், திண்மவணம் "அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தமிழக அரசு செலவு செய்த சிகிச்சைக்கான தொகையை தி. மு.க. தலைமை நிலையம் கட்டிய வகையில் முதலாவதாக 12-9-68 அன்று ரூபாய் 38, 770-ம் 21 காசும் திரும்பச் செலுத்தப்பட்டது. இரண்டாவ தாக 26-12-68 அன்று ரூபாய் 94,752-ம்74காசும் திரும்பச்செலுத்தப் பட்டது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்றி ஐம்பத்திரண்டு ரூபாயும் தொண்ணூற்றி ஐந்து காசு களும், தி.மு.க. சார்பில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது." என்ற விளக்கத்தை அவையில் நான் அளித்தேன்! 38148 1977-ல் தமிழ் நாட்டில் அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே மாத வாடகையாக இரண்டாயிர ரூபாயை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு - அதுவும் கடந்துவிட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு மொத்த வாடகை பெற்றுக் கொண்ட அவலத்தை அரங்கேற்றிய காட்சியைக் காணும்போது, அண்ணா அவர்கள் தனது சகிச்சைத் தொகையைக் கூட அரசுக்குத் தந்துவிட முன்வந்ததையும், அதற்குக் கழகச் சார்பில் நிதி திரட்டிப் பணத்தைத் திருப்பித் தந்ததையும் நினைத்துப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியுமா? சட்டமன்றத் தொடர் கூட்டம் முடிவுற்றபோது, பழம் பெரும் விடுதலை வீரரும்-தியாகியும் -சட்டமன்ற உறுப்பினருமான கோமதி சங்கர தீட்சதர் அவர்களுக்கு எண்பது வயது நிறைவை யொட்டி அரசின் சார்பில் பாராட்டு விழா ஒன்று ராஜாஜி மண்ட பத்தில் நடத்தப்பட்டது.