பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நெஞ்சுக்கு நீதி ஆளுநர் உரையிலும் சரி, நிதிநிலை அறிக்கையிலும் சரி, சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர்கள் காரசாரமாகவே கழக அரசைக் கண்டித்தனர். புதியவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பொறுப்பேற்றிருக்கிறார்களே, பார்ப்போம் என்ற நிதானம் அவர்களிடம் அப்போது இல்லை நாங்கள் புதியவர்களாக இருந்தாலும் 1967 முதல் ஆட்சி நடக்கிறதேயெனக் கூறி இரண்டாண்டு கூறி இரண்டாண்டு காலமும் கொடுங் கோல் ஆட்சி நடந்ததாகவே அவர்கள் பேசினர். இராமலிங்கம் என்ற காங்கிரஸ் உறுப்பினர் ; என்னை முதலமைச்சராகத் தேர்ந் தெடுத்ததையே ஏகடியம் செய்தார். முடிவதற்கு "மறைந்த முதலமைச்சருக்காக அனுதாபம் அனுஷ்டிக்கப் பட்ட ஏழு நாட்கள் முன்பே, ஆறாம் நாளே - கண்ணீர் வற்றுவதற்கு முன்பு - புதிய முதலமைச்சர் தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டார்” என்று அவர் அவையில் பேசினார். அதற்கு நான்;"பண்டித நேரு மறைந்தபோது பனிரெண்டு கடைப்பிடிக்கப்பட்டது. நேரு துக்கம் நாட்கள் ஆனால் மறைந்த மூன்றாம் நாளே லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காங்கிரஸ் இயக்கத்தினர் மறந்து விடக்கூடாது" என்று அடக்கத்துடன் பதில் அளித்தேன். முதல்வர் அண்ணா மறைந்த அடுத்த விநாடியே தற்காலிக முதல்வராக நாவலர் பதவியேற்றது கட்டாயத்துக்குரிய ஒரு முறை என்கிற போது - மாநில மக்களை வழி நடத்த ஒரு உறுதி யான அமைச்சரவை உடனடியாக அமைவதைக் கேலி செய்ய சிலர் முனைந்தது ; எதிர்ப்பு-எரிச்சல் இவற்றின் காரணமே தவிர வேறல்ல! சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு நெய்வேலியில் இருந்து ஒரு செய்தி வந்தது. விழாவில் திருமுருக-கிருபானந்தவாரியார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது அண்ணாவின் மறைவு குறித்துக் கிண்டலாக பேசியதாகவும் அதனால் மக்கள் கொதித்தெழுந்து அமளி ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. அது குறித்துச் சட்டமன்றத்தில் காங்கிரசார் கேள்வி தரப்பில் சட்ட களை எழுப்பினர். அப்போது காங்கிரஸ் மன்றக் கொறடாவாக இருந்தவர் விநாயகம் அவர்கள்! (இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இணைந்துவிட்டார் ஆர்ப்பாட்டமான உரையும், ஆணித்தரமான கழகத்தில்