பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உறவுகள் - உரிமைகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழக மெனும் அறிவுக் கடலில் முத்துக் குளித்துத் தேர்ந்தெடுத்த முத்துக்களில் அன்பழகனும் ஒருவர் என்று அண்ணா அவர்களால் வாழ்த்திப் புகழப்பட்ட வர் பேராசிரியர் அவர்கள் ! முதல்வர் பொறுப்பை நான் ஏற்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர் குழுவின் தலைவராக இருந்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றக் கட்சித் தலைவர் (முதலமைச்சர்) தேர்தலில் எந்தக் கருத்தும் கூறாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். அண்ணாவை இழந்த சோகத்தில் திக்குத் தெரியாமல் நின்ற கழகத்தை வழி நடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குறி அவரை மௌனமாக்கிவிட்டது என்றே கூறலாம். எந்தப் பிரச்சினையிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனக் கண்டிப்பாகக் கருத்துக்களைக் கூறக் கூடியவர் தலையிடுவதால் இந்தப் பிரச்சினையில் புதிய சிக்கல்கள் தோன்றக்கூடுமென்றும் அதனால் தற்சமயம் ஒதுங்கியிருப்பதே கழகம் எடுத்திடும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகப் பொருள் என்றும் அவரைச் சந்தித்த நண்பர்களிடம் விட்டுச் சொன்னார். மனம் சென்னை நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு நேப்பியர் பூங்காவில் 1969 மார்ச் 9 - ஆம் நாள் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் நான் சென்று கலந்துகொள்வதற்கு முன்பாகவே கூட்டத்திற்குத் தலைமை வகித்திருந்த பேராசிரியர் அவர்கள் உரையாற்றி முடித்துவிட்டார். அன்று அவர்