பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நெஞ்சுக்கு நீதி விளை ஆற்றிய உரையினை வைத்துக் கழகத்திற்குள் கலகம் விக்கலாமா என்று மாற்றார் சிலர் திட்டமிடத் தொடங்கினர். பேராசிரியர் நெஞ்சில் பட்டதைச் சொல்லக்கூடியவரே தவிர, பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திடக் கனவிலும் முனையாதவர்; என்னிடம் மிகைபடச் சொன்னவர்களை அமைதிப் படுத்தினேன். தலைவர் பயன் இதனை நான் எழுதும்போது இந்தக் கழகத்திற்கு நான் தலைவர்! பேராசிரியர் பொதுச் செயலாளர்! நாங்களிருவரும் பிரிக்கப்பட பிரியாதவர்கள் ! முடியாதவர்கள்! என்பதும் ஏற்றுள்ள பொறுப்புக்களை சுட்டிக்காட்டப் படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை. ஏற்றத் இலக்கணமாக இதய "இடுக்கண்" களையும் நட்பின் உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஓர் உடன்பிறப்பாக - இந்தத் தமிழினம் காக்க உற்ற உற்ற படைக்கலனாகத் திகழுகிற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை நீக்குவது எனக்கு மிகப் பெரும் கடமையாயிற்று! கழகத் தலைமையேற்று தலைவராக இருந்து வழிநடத்தும் தகுதியை நான் முற்றிலுமாகப் பெற்றிருக்கிறேனா என்பதுதான் பேராசிரியருக்கு அப்போது ஏற்பட்ட ஐயப்பாடு! அதைத்தான் நேப்பியர் பார்க் பாராட்டுக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டி என்னை யிருக்கிறார். அவர் பேசியதற்கும், மற்றும் சிலர் எல்லையற்றுப் பாராட்டியதற்கும் அவசியத்திற்கு ஆளானேன். பதில் அளிக்கவேண்டிய "முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப்பற்றிக் கூறிப் பலர் வாழ்த்தினார்கள். ஆனால் நானோ "முதல்" இழந்த அமைச்சனாக -என்னை உருவாக்கிவிட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். முதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக் காலால் இடும் கில்லை. நாலரைக் கோடித் தமிழ் மக்களும் கட்டளையைத் தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் என்ற நினைப்பில்தான் தொண்டருக்குத் தொண்டன் நான் தலைமை வகித்துள்ள இருக்கிறேன். இந்தக் கூட்டத்திற்குத் தலைமை பேராசிரியர் அவர்கள், "கருணாநிதியைத் தலைவராக அல்ல; தளபதியாக மட்டுமே ஏற்றுக் கொள்வேன்" என்று கூறினாலே போதுமானது. தளபதியைத் "தளர் - பதி" ஆக்கிவிடாத