பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகராட்சிகளில் காங்கிரஸ் தோல்வி Allis 9 முதல் குரலும் - முதல் பிளவும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் டெல்லியில் சந்தித்துப் பேசுவதற்காக முதல் தடவை சென்ற போதே தொழில் அமைச்சர் மாதவன் அவர் களைத்தான் நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். நல்ல நண்பர்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரா கவும் நான் அவரை ஏற்று அவருடன் நெருக்கமாகலே பழகி வந்தேன். கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் சிலருக்குக்கூட நான் இப்படி ஓரிரு அமைச்சர்களுடன் நெருக்க மாக இருப்பது வெறுப்புக்குரிய விஷயமாக இருந்தது என்பதை நான் அறிந்திருந்தும் அதைப் பொருட்படுத்தாமலே இருந்து விட் டேன். அந்த அலட்சியப் போக்கினால் பிறகு நான் எவ்வாறெல் லாம் அல்லற்பட நேர்ந்தது என்பதை எண்ணிடும் போதுதான் என் தவறு என் நெஞ்சைக் குடைந்தது. அந்த அதிர்ச்சி நிகழ்ச்சி களையெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் அவ்வப்போது உரிய அத்தியாயங்களில் நான் எழுத இருக்கிறேன் என்பதற்குப் பீடிகைதான் இது! நானும் மாதவனும் 17-3-69 காலை 11-30 மணி அளவில் விமான மூலம் டெல்லி போய்ச் சேர்ந்தோம். விமான நிலையத்தில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் பேராசிரியர், துணைத் தலைவர் நாஞ்சிலார், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள தமிழ்க் குடும்பங்களைச் சார்ந்தோர் -