பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நெஞ்சுக்கு நீதி ☐ "மத்திய மாநில உறவு குறித்து விவாதிக்க பிரதமர், மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டும்" என்று காமராஜர் அவர்கள் அப்போது அறிவித்திருந்த கருத்து பற்றி நிருபர்கள் என்னிடம் அபிப்பிராயம் கேட்டார்கள். "அதைப்பற்றி காமராஜர் அவர்கள்தான் விளக்க வேண்டும். அப்படியொரு கருத்தை வெளியிட்டதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். இதுபற்றித் தி.மு. கழகத் தரப்பில் தூண்டுதல் எதுவும் கிடையாது. காமராஜர் இப்போது மத்திய அரசின் ஆளுங் கட்சித் தலைவர்களில் ஒருவர். அவரது அறிவிப்பு குறித்து மத்திய அரசின் மற்ற தலைவர்களின் கருத்தை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்' என்று விடையளித்தேன். "மாநில சுயாட்சி, மாநில அதிகாரங்கள் போன்ற பிரச்சினைகளை எழுப்புவது மூலம் பிரிவினைக் கோரிக்கையை மீண்டும் கிளப்பிடக் கழகம் முயற்சி செய்கிறது என்று சி. சுப்பிரமணியம் கூறியிருக்கிறாரே!" என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் காமராஜர் அவர்களே மத்திய மாநில உறவுகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று தெளிவுபடுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். மத்திய மாநில அரசுகளுக்கிடையே புதிய உறவு முறைகளை வகுத்திட மாநில அரசுகள் - குறிப்பாக காங்கிரசல்லாத மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து விவாதிக்க வேண்டுமென்று மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி கூறியிருந்த கருத்தையும் நிருபர்கள் கூட்டத்தில் நான் வரவேற்றேன். "மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்லுறவு வளர அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக் கின்றன. அவற்றை மாநில அரசுக்குப் பகிர்ந்து கொடுத்தால், மத்திய அரசின் சுமை குறையும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங் கள் கிடைக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். எந்தெந்த அதிகாரங்களை மாநிலங் களுக்குத் தரலாமென்று ஆலோசித்துப் பரிந்துரைக்கும் அறிக்கை தந்திட கல்வி நிபுணர்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை அமைப்பதென்று அரசியல் தமிழகத்தில் கழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தும் போது இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பலமாக இருக்க