பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி-75 மொரார்ஜியைக் குறை கூறிய மோகன் தாரியாவைப் பார்த்து "நீர் என் முதலாளி அல்ல!" என்று ஆத்திரமாகக் கூறினார் தேசாய்! உடனே சந்திரசேகர் துடித்தெழுந்து, "இங்கே எல்லோரும் சமமானவர்கள்! உறுப்பினர்களின் கருத்துக்களை வெளியிடக் கட்சிக்குள்ளே தடை விதிப்பதும் ஆத்திரப்பட்டு அடக்குவதும் கூடாது" என்று ஆவேசமாகப் பதில் சொன்னார். மொரார்ஜி மீது குற்றம் சாட்டிய மோகன் தாரியா, சந்திரசேகர் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மைசூர் மாநில காங்கிரஸ் தலைவர் நாகப்பா ஆல்வா என்பவர் வலியுறுத்தினார். அவரது கருத்தைக் காமராஜர் அவர் களும், ராம்சுபாக் சிங், சி. பி. குப்தா, வீரேந்திர பட்டீல் ஆகியோரும் ஆதரித்து சந்திரசேகர், மோகன் தாரியா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். சி. சுப்பிரமணியம் அவர்கள் அவ்வாறு நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தார். இறுதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்படி யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். சந்திரசேகர் பேசுவதற்கெல்லாம் நான் ஏன் பதில் கூற வேண்டும்? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அவரிடம் இந்திரா காந்தி தெரிவித்தாரா இல்லையா என்று நான் ஏன் சந்தேகப்படவேண்டும்? கட்சியின் குறிப்புப் புத்தகத்தில் அந்தக் கண்டனம் எழுதப்பட்டுவிட்டது. என்னுடைய மதிப்பைக் குறைக்க சிலர் சுமத்தும் ஊழல் புகார் பயமுறுத்தல் களுக்காக நான் பயந்து பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்". என்று முழங்கினார் மொரார்ஜி! இந்த நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் பிளவுக்குத் தொடக்கமாக அமைந்தன. அந்தத் "துவஜாரோகண" அறிகுறிகள், நான் முதல்வர் பொறுப் பேற்று முதல் முறையாக டெல்லிக்குச் சென்றபோதுதான் தெரிய ஆரம்பித்தன! off