பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 077 அம்மாவுக்குத்தான் சிறு சிறு காயங்கள். அப்போதும் தப்பித்துக் கொண்டேன், திருவாரூர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும்போது, பிற்பகல் பள்ளிக்குச் செல்ல வெயிலை மறைக்கக் குடை பிடித்துக்கொண்டு போனபோது கோயில் காளை மிரண்டுபோய் என்னைத் துரத்திப் பாய்ந்து ஒரு பெரிய கல்லில் மோதிவிட்டுச் சென்றது. குடை தான் அதன் கொம்புகளால் கிழிந்ததே தவிர என் குடல் கிழிய வில்லை. அப்போதும் பிழைத்துக் கொண்டேன். திருவாரூரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் மாண வனாக இருந்து கொண்டே நீதிக்கட்சி வேட்பாளர்களுக்குத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தேன் - பணியாற்றினேன் என்பதற் காகத் தோல்வி கண்டவர்கள் வெறி உணர்ச்சியுடன் என் கால் கைகளைத் துண்டாடிவிட முயன்றபோது நண்பர்கள் தந்த முன் எச்சரிக்கையின் காரணமாகக் கடைசி விநாடியில் அந்தக் கொலை வெறியர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டேன். திராவிடர் இயக்கக் கொள்கை விளக்க நாடகங்களை திருவாரூர், நாகை, விழுப்புரம் போன்ற இடங்களில் நடத்திவிட்டு புதுவையில் கெப்ளே தியேட்டரில் தொடர்ந்து ஒரு மாதம் நடத்தி இயக்க உணர்ச்சியை உருவாக்கியதற்காகவும், புதுவை யில் திராவிடர் கழக மாநாட்டை நடத்துவதில் முனைப்பாக இருந்தமைக்காகவும் புரட்சிக் கவிஞருடனும், கல்யாணசுந்தரம் அவர்களுடனும் சென்ற என்னையும் அவர்களை யும் எதிரிகள் தாக்கினர். 8.காஞ்சி நாங்கள் சிதறியோடிய நிலையில் என்னை அடித்துப்போட்ட வர்கள் நான் இறந்துவிட்டதாகவே கருதிச் சென்று விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு மூச்சை தெளிந்து எழுந்து பெரியார் கரங்களால் காயங்களுக்கு மருந்து தடவப்பட்டது. கொலைச் சதியிலும் தம்பித்துக் கொண்டேன். அந்தக் விழுப்புரத்திற்கு அருகாமையில் நானும், உடுமலை நாராயணக் கவிராயரின் மாணவர் செல்லமுத்தும் சென்ற கார், வண்டியொன்றில் மோதி - அந்தப் பயங்கர விபத்திலும் செ ற்ப காயங்களுடன் தப்பித்துப் பிழைத்தேன். முகவை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கருகில் நான், அன்பில், பராங்குசம், பண்ணை முத்துகிருஷ்ணன், தென்னன் ஆகியோர் சென்ற கார், மிகப் பயங்கரமான விபத்துக்கு உள்ளாகி - சாலையிலிருந்து உருண்டு சென்று பயணியர் விடுதி