பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நெஞ்சுக்கு நீதி வாசற் கதவை நொறுக்கிவிட்டுக் கவிழ்ந்து கிடந்தது. அப்போது தான் ஒரு கண்ணில் மட்டும் அடிபட்டு உயிர் பிழைத்தேன். ஒருமுறை கோவையிலிருந்து புஞ்சைப்புளியம்பட்டிக் கூட்டத்திற்குச் செல்லும்போது காங்க்ரீட்டால் ஆன மின்சாரக் கம்பங்களை ஏற்றிச் சென்ற வண்டியொன்று எங்கள் காரின் முன் பகுதியில் மோதி - காரின் முகப்பு நொறுங்கிப் போயிற்று! முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கும் என்னுடன் கோவை மாவட்டக் கழக முன்னோடிகளுக்கும் ஆபத்து ஏது மின்றித் தப்பிப் பிழைத்தோம். முடித்து அன்பில் கிராமத்துக்கருகே கூட்டமொன்றை விட்டுக் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குறுக்கே வரும்போது- திடீரென வெள்ளம் கரைபுரளத் தொடங்கியது! மேலே மழை கொட்டுகிறது! நான், மாறன், அன்பில், பராங்குசம், குளித்தலை பண்ணை முத்துகிருஷ்னன். கோவிலடி முத்துக்கிருஷ்ணன், ரத்தினம் - அந்தக் கழுத்தளவு வெள்ளத்தில் நள்ளிரவில் எப் படித்தான் உயிர் பிழைத்தோம் என்பதை இன்னமும் வியப் புடன்தான் எண்ணிட இயலுகிறது! கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தபோது, ரயிலின் திடீரெனப் புகை கக்கியவாறு பெரும் கூச்சலுடன் சக்கரங்கள் என் கழுத்துக்கு அருகாமை வரையில் வந்து பய முறுத்தின! நான், முல்லை நான், முல்லை சக்தி, கஸ்தூரிராஜ், குமாரவேல், குழந்தைவேல் -கல்லக்குடிப் போராட்டத்திற்குப் பிறகு என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் ஒருவர்பின் ஒருவராக சில ஆண்டுகளில் இறந்து விட்டார்கள். அதிலும் நான் ஒருவன்தான் எனக் கூறிக்கொண்டு வயது அறுபதைத்தாண்டி விட்டேன்" வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 1965-ல் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறைச்சாலைக்குச் சென்னையிலிருந்து நானூறு மைல் தொலைவு போலீஸ் லாரியில் கொண்டு சென்ற போது மதுரைக்கருகே நெஞ்சுவலியால் பாளைச் சிறையில் துவண்டு விழுந்தபோதும் - தொடர்ந்து தனிமையில் வதைக்கப்பட்டபோதும் - அந்த மனச்சுமைகூட என்னை மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லாமல் பிழைத்து உலவலானேன்! உயிர் சைதாப்பேட்டைத் தொகுதி வேட்பாளர் என்கின்ற முறையில் நானும், காஞ்சி மணி மொழியார், வெங்கிடங்கால் 1967 பொதுத்தேர்தலின்போது சந்தானம், வாழக்கரை இராச அந்த பயங்கர கோபால் ஆகியோரும் கோட்டூர்புரம் சென்றபோது நள்ளிரவில் எங்கள் காரை மடக்கி நாலாப்புறமும்