பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நல்லறிவைப் பண்பாட்டை ஒழுக்கந் தன்னை நாகரிகக் கலைவளத்தை விஞ்ஞா னத்தைச் சொல்லுதற்குப் படைப்பாற்றல் கொண்டோன் கையில்; சுழல்கின்ற கோலொன்றே எழுது கோலாம்; புல்லறிவால் பொருள் பெருக்கல் ஒன்றே நோக்கிப் புழுத்ததெலாம் வரையுங்கோல் கன்னக் கோலாம்: நல்லறிவைக் கெடுத்துமிகப் பொருள் ப றிக்க நன் மைக்கே தீவைக்கும் நெருப்புக் கோலாம் மறைப்பிடமே இல்லாமல் சதையைக் காட்டி மதர்ப்புடனே நடிக்கின்ற மங்கை நல்லார் கறைப்படுமே பண்பாடென் றெண்ணா ராகிக் கன்னத்தை வாடகைக்கு விட்டால், மீண்டும் தரப்படுமே நடிப்பதற்கு வாய்ப் பென் றெண்ணித் தரங்கெட்ட காட்சிகளில் நடித்துக் காட்டும் திரைப்படங்கள் வளர்வதற்கிங் கிடங்கொடுத்தால் தெருப்புழுதி போலாகும் மக்கள் நெஞ்சம் கற்பழிப்பு, களவாடல், கடத்தல் என்ற கயமைஎலாம் கற்பிக்கும் கதைகள், கெட்ட சொற்பெருக்கம் கொண்டொழுகும் காமப் பாட்டு, துள்ளிவரும் நடனமென ப் பேயின் ஆட்டம், மற்போர்கள் செய்வதுபோல் காதற் காட்சி, மாமேதை இயக்குநர்கள் திறமை, எல்லாம் கற்போர்கள் நெஞ்சத்தைக் கெடுப்ப தல்லால் கடுகளவு நலமேனும் தருவ துண்டோ? 24