பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே பெறற்கரிய பருவமிது; பெற்ற ஒன்றைப் பெருநெறியில் நல்வழியில் பயன்படுத்தின் உறற்கரிய உயர்வெல்லாம் உம்மைச் சேரும் உமதறிவால் நாட்டுக்கும் நன்மை சாரும்; குறட்கருத்தை சாந்துணையும் கற்க’ என்ற கோலமொழி தரும்பொருளை நூல. கந்தான் தர ற்குரிய இடமாகும்; பொழுதை எல்லாம் தக்கபடி பயன்படுத்திப் பெருமை கொள்க. அன்பருடன் நகைமொழிகள் பலவும் பேசி அரட்டையடித் தலைவதுதான் பொழுது போக்கா? நண்பருடன் திரைப்படங்கள் பார்த்து விட்டு நடுத்தெருவில் திரிவதுதான் பொழுது போக்கா? என் பெருமை கண்டீரோ? பொழுதை எல்லாம் இவ்வண்ணம் போக்கடித்தால் பயனே இல்லை; மின்பொழுதும் வீணரின் றி நூல்ப டித்து மேம்படுக, பருவத்தே பயிரைச் செய்க. = உலகரங்கில் அரசியலில் தனித்து நின்ற ஒருமனிதர் இராசகோ பாலர் என் பார் நிலவுபுகழ் மூதறிஞர் எனவு யர்ந்தார்; நிகரில்லாப் பேச்சாளர் , எங்கள் நெஞ்ச மலருறையும் பண்பாளர், காஞ்சி அண்ணா வான் புகழின் உச்சிக்கே சென்றார் என்றால் குலவுபுகழ்ச் சென்னை நகர்க் கன்னி மாரா' நூலகத்தை ஏணியெனக் கொண்டே யன்றோ? 32