பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே எதுசெய்தும் வெற்றிபெற எண்ணுவதால் தேர்தலிலே இழிந்த போக்கைப் புதுமுறையிற் காணுகிறோம்; போடுகிற சீட்டுகளும் புகைந்து போகும் விதிமுறையும் வேறாகும் வேட்பாளர் சாதிகளும் வேறாய்த் தோன்றும் பதிவான சீட்டுகளிற் பலபெயர்கள் மாறிவரும் பறந்து போகும். கற்றறிந்து சிந்தித்துக் கண்டுணர்ந்து செயலாற்றும் கடமை வேண்டும்; பற்றழிந்த தொண்டுளத்தைப் பண்புளத்தைப் பொதுநலத்தைப் பாது காத்தல் உற்றவர்க்குக் கடமையென உளத்துாய்மை முறைமையென உணர்ந்து விட்டால் பெற்றதொரு விடுதலைக்குப் பெருமைவரும் தேர்தலுக்கும் பெருமை யுண்டு 70