பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே "பிணியெதும் அணுகா வண்ணம் பெருந்தொகை செலவு செய்தேன்; துணிமணி கல்விக் கான தொகையையும் சிறிது பாரும்; பணியிடை அமர்த்து தற்குப் பணத்தினை யள்ளித் தந்தேன்; மணமகன் வேண்டு மென்றால் மற்றிவை வேண்டும்’ என்பான் . பெற்றவன் மகனுக் காகப் பெருத்தொகை செலவு செய்தல் உற்றதோர் கடமை யாகும்; உணர்விலான் ஊரி லுள்ள மற்றவன் தலையிற் t:Մ) 5EՃԱ5) Ա வைத்திட நினைந்தாற் பெண்ணை ப் பெற்றவன் யாது செய்வான் பித்தனாய் மாற லன்றி? பெண்களைப் பெற்ற தந்தை பெருந்தொகைக் கியலா னாகிப் புண்களை நெஞ்சில் வைத்துப் புழுங்கியே வாடு கின்றான் பெண்களும் மணங்கா ணாராய்ப் பேத்லித் தழிந்து போனார்; எண்ணிநல் வமியைக் காண எவனுமே விரும்ப வில்லை. 87.