பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


கவிஞரின் மகள் பேசுகிறேன் ....
வாசக நேயர்களே! வாசியுங்கள்! வாசித்ததை நேசியுங்கள்! அசைபோடும் விலங்குகள் போல மீண்டும், மீண்டும்!
அதன் சத்தும், சாரமும் உள்ளே இறங்கட்டும். புத்தரின் அமைதி, செல்வத்தில் இல்லை, மாசு மறுவற்று மலர்ந்த மனத்தில் மட்டுமே!

நாம் அமைதியாக வாழவும் பிறரை வாழ வைக்கவும், குற்றமற்ற, சுயநலமற்ற மனம் வேண்டும்.

நீங்கள் புத்தராக வேண்டாம்; மனித நேயமிக்க மனிதராக ஆகுங்கள்!
இதன் சத்தும், சாரமும் இதயத்தில் நிறைந்து, விழிகளில் சுடர்ந்து நாவில் தேன் துளிகளாய்ச் சிந்தட்டும். வாழ்வின் இலட்சியங்களாய் மலர்ந்து மணம் பரப்பட்டும்.

கலாமின் கனவுகள் நனவாகட்டும். பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அகிம்சையில், கருணையில், தியாகத்தில் மிஞ்சியது 'பாரதம்' எனப் போற்றிப் பேசட்டும்.

உங்கள் அனைவரின் தாயாகி வாழ்த்தும்,

வெ.இரா.நளினி