பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

விலங்குகளில்லாத மனித வாழ்வு பாழானது. எல்லா ஜீவராசிகளும் இவர்களால் சுடப்பட்டு, அறவேயில்லாத போது, மனித குலமே ஒளியற்ற தனி வாழ்வில் நாசமடைகிறது. ஏனெனில், பிராணிகளுக்கு இவர்கள் ஏற்படுத்திய தலைவிதி இவர்களுக்கும், எதிர்காலத்தில் விதிக்கப் பட்டிருக்கும் எல்லா ஜீவராசிகளும் ஒன்றுக் கொன்று சம்பந்தப்பட்டேயுள்ளன.

நீங்கள் உங்கள் மக்களுக்கு அவர்கள் கால்களுக்குக் கீழாகயிருப்பது எங்களது மூதாதையர்களின் சாம்பல் என்பது பற்றிச் சொல்லித் தெரிவிக்க வேண்டும். இந்தப் பூமி எங்கள் குலத்தவரின் வாழ்வினால் நிறைவு பெற்றுள்ளது என்பதை உங்கள் மக்களுக்குப் போதிக்க வேண்டும். அவர்களுக்குப் பூமி மதிக்கப்பட வேண்டுமென்பதைக் கற்பித்திருக்க வேண்டும். இந்த மண் “எங்களுடைய அன்னை” என்று நாங்கள் எங்கள் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளதைப் போல் நீங்களும் உங்கள் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மண்ணுக்கு ஆவதுதான் மண்ணின் மேல் பிறந்த மக்களுக்கும் ஆகின்றது. மனிதர்கள் இந்த பூமியை உதாசீனம் செய்தால் அது தம்மைத்தாமே உதாசீனம் செய்து கொண்டது போலும்.