பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

87

இறைவன் உங்களுடையவன் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அது அப்படியில்லை. இறைவன் எல்லாருக்குமுரியவன், பொதுவானவன். அவன் எங்களுக்கும் வெள்ளையனுக்கும் சரிசமமான அவனுக்கு மகத்தானது. மண்ணுக்குப் பாதகம் செய்தால் நம்மை உண்டாக்கிய அந்த எல்லாம் வல்ல இறைவனையே அவமானம் செய்ததைப் போல. மற்ற எல்லா மக்களின் காலமும் முடிவதற்கு முன்பேயே வெள்ளையனின் காலம் முடிந்து போகக் கூடும். நீங்கள் உறங்கும் உங்களது படுக்கையிலேயே அசூசி செய்தால், ஒரு நாள் அந்த அசூசியிலேயே உங்களுடைய உயிரை நீங்கள் விட வேண்டியிருக்கும்.

ஏதோ ஒரு உத்தேசத்துக்காக இறைவன் உங்களுக்கு இந்த நிலம், மேலும் இந்த நிலத்தின் வாழும் மனிதர்கள் மேலே ஆளுமையைக் கொடுத்துள்ளான். இந்த விதி விலாசம் எங்களுக்கு மர்மமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் நீங்கள் காட்டெருமைகளை வீணாக சுட்டுக் கொல்வதிலும், காட்டுக் குதிரைகளுக்குக் கடிவாளம் இடுவதையும்,