பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

மணங்கமழுகின்ற அழகிய காடுகளினிடையே ஒருவரோடொருவர் உரையாடுவதற்கான கம்பிகளை இழுத்து, காடுகளின் இயல்புக்குக் குறைவு ஏற்படுத்தியதை நாங்கள் புரிந்து கொள்ளவே இயலாது.

நீங்கள் இங்கு வந்து குடியேறியதன் காரணமாக முந்தி இருந்ததைப் போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த வனங்களில்லை. தேன் கூடுகளில்லை. வைகறைப் போதில் அரும்பி மலர்ந்த மலர் வனங்களில்லை. பசுமையான புதர்களில்லை. பறவைகளெல்லாம் எங்கேயுள்ளன? விலங்குகளெல்லாம் எங்கே உள்ளன? துள்ளிக் குதித்து விளையாடி எங்கள் உள்ளங்களையும், கண்களையும் ஒருங்குகவர்ந்து கொண்டிருந்த அந்தக் கலைமான்களின் கூட்டம் எங்குப் போய் ஒழிந்தன? ஆம்! இனிச் செவ்விந்தியர்களாகிய நாங்களும் சரி, எங்களோடு சேர்ந்து ஒன்றி வாழ்ந்த விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் நிலைத்து, இந்த மண்ணின் மேல் வாழ்வதற்காக இனி வெள்ளையரோடு போராட வேண்டிய காலம் வர ஆரம்பமாகி விட்டது”.