பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெள்ளியங்காட்டான்

ix


நன்றி...

போராடிப் போராடித் தோற்றுப் போன தந்தை!

போராடித் தோற்றுவிடுவேன் என
மரணத்தை அழைக்கும் வயதில்,
“மனித நேயம் மிச்சமின்றி” என,
இதயம் உருகி,
இருகை நீட்டி,
இருநூல்கள் வெளிவர உதவிய
புவியரசு என்னும் கவிஞர் பெருந்தகை...

மாபெரும் கவிஞன் மக்களுக்காகச்
சூடிக்கொடுத்த சுடர்க் கதை மாலை
இது என்று கனிந்து
நெகிழ்ந்து இனிய நன்மொழி கூறி,

அழிந்து விடுமோ என நான்
அஞ்சி நினைத்ததை,
முழு முயற்சியோடு
அழகாக்கி, உயிர்கொடுத்து
நீங்கள் உட்கொள்ளக் கொடுத்த சகோதரர்,
கவிஞரைக் கொண்டாடும் கவிஞர்,
ஸ்ரீ சே.ப. நரசிம்மலு நாயுடு நினைவு
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்
இரணியன் என்னும் அன்பு நெஞ்சினர்...

என் தந்தையின் நூல்கள்
“கவியகம்”, “நீதிக் கதைகள்”
ஆகியவற்றை அழகுற அச்சிட்டுக் கொடுத்த
நந்தினி அச்சகம் தோழர் வேனில்...
மற்றும் அச்சக நண்பர்கள்
அனைவருக்கும்
என் தந்தையின் ஆசியும் என்றும் என் நன்றியும்.

-வெ.இரா.நளினி