பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


இருள் விலகுகிறது இன்று! சிதலை தின்னப்பட்ட ஆலமரத்தை அதன் விழுது தாங்கி நிமிரச் செய்வது போல, தந்தையின் அறிவுச் செல்வத்தைத்தாம் ஏந்தி வந்து தந்தையின் புகழைத் தமிழ் வானில் நிமிரச் செய்கிறார் அவர் திருமகள்! நளினி அம்மையார் எனும் நற்றாய்! மகள் தந்தைக்கு ஆற்றும் பணியைக் கண்ணுறும்போது, ‘இவா்தந்தை என் நோற்றாரோ?’ என்று எண்ண வேண்டி இருக்கிறது! மக்களைப் பயந்த தாய் தந்தையரைத் தான் உலகம் அறிந்துள்ளது. ஆனால் தந்தையைப் பயந்த மகளை இப்போதுதான் உலகம் அடையாளம் காண்கிறது.

அம்மையார் அவர்களின் அரு முயற்சியால், கவிஞாின் கவிதைத் தொகுப்புகள் இரண்டு வெளியாகின! இப்போது இளம் உள்ளங்களைப் பண்படுத்தும் ஓர் அருமையான சிறுகதைத் தொகுப்பு நம் கைகளில் தவழ்கிறது. கவிஞா் தமிழை ஆழக்கற்றதுடன் கன்னடமும் கற்றுத் தோ்ந்தவர். கன்னட மொழியில் வழங்கும் நல்ல கதைகளை,நல்ல வரலாற்றுச் செய்திகளை அன்னைத் தமிழில் அழகுறப் படைத்திருக்கிறார்.

நெஞ்சை நெகிழ்விக்கும் மேலான நீதிகள் அடங்கிய கதைகள் இவை! மனித மனங்களில் நற்பண்புகளைச் செழிக்கச் செய்பவை!

“மனிதாிலும் மேலான தாய்மைப் பண்பு வாய்ந்த கொரில்லாக் குரங்கு; மக்கள் உயிா்கள் காக்கப் படுவதற்காகத் தம் உயிரை ஈந்த மகா நாமா்; சொற்பிறழாது ஏழைக்குப் பெருந் தொகை நல்கிய