இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. தியாகம்
சாது மகா நாமர் என்பவர் கபிலவஸ்து என்ற ஊரில் பிறந்தவர். பகவான் மகாவீரரைக் குருவாகக் கொண்டவர். தூய உள்ளமும் நல்லொழுக்கமும் பிறவியிலேயே அவருக்கு இயல்பாக அமைந்து இருந்தன.
பகவான் மகாவீரரின் சீடராகப் பணிபுரிந்த போது அவர் உபதேசித்த ஒரு வாக்கியம் - “நாஸ்தி தியாக சமண் சுகம்” என்பது. அதன் பொருள் தியாகத்தை மிஞ்சிய சுகம் இல்லை என்பது தான். அவ்வாக்கியம் அவரின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது.