இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
ஒரு காலத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவனான விடூபன் என்பவன் - சீராவஸ்தி என்ற நகருக்கு அரசனானான். பிறகு அவன் பெரும் படையோடு கபிலவஸ்துவை முற்றுகையிட்டுப் புரிந்த போரில் வெற்றியும் பெற்றான்.
இரக்கம் என்பதே அறியாத அவன் அப்பாவி மக்களையெல்லாம் கொன்று குவிக்கத் தொடங்கினான்.
அப்போது அங்கு வருகை தந்த மகா நாமர் இதைக் கேள்விப்பட்டுத் தன்னிடம் கல்வி கற்ற ஒரு மாணவன் இத்தகைய கொடூர குணமுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிக் கலங்கினார்.
இச்செயலைத் தடுத்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அவனைக் காணச் சென்றார். தான் ஓர் அரசன் என்ற கர்வம் விடூபனுக்கு இருந்த போதிலும் தனக்குக் குருவாக இருந்ததால் அவரை வரவேற்க வேண்டியதாயிற்று.
அவனுக்கு வணக்கம் கூறிய மகாநாமர் “அரசே நீ என்னிடம் கல்வி கற்ற போது குருதட்சணை கொடுக்க முன் வந்தாய். ஆனால்