கவிஞர் வெள்ளியங்காட்டான்
7
நான் அதை வேண்டும் போது பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தேன். இன்று அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்” என்றார். சற்றுத் தயங்கிய விடூபன் “சரி கேளுங்கள்" எனத் தலையசைத்தான். “இங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் குருதட்சணை" என்றார் மகாநாமர்.
குள்ளநரியைப் போல் சில கணங்கள் யோசித்த விடூபன் “குருதேவா, இந்த தட்சணையை ஒரு நிபந்தனையோடு தங்களுக்குத் தர விரும்புகிறேன். அரசன் என்ற முறையில் என் நாட்டையும் மக்களையும் நான் காப்பாற்றியாக வேண்டும். தோல்வியுற்ற இந்நாட்டு மக்கள் நாளை படை வீரர்களாய் உருவாகலாம். என் நாட்டின் மீது போரும் தொடுக்கலாம் அல்லவா? ஆனால் என் குரு என்பதால் தங்களின் தட்சணையையும் நான் மறுக்க விரும்பவில்லை. ஆகவே நீங்கள் ஒரு நீர் நிறைந்த குளத்தில் மூழ்கி மேலே வரும் கால அளவுவரை நான் அவர்களைக் கொல்லும் செயலை நிறுத்தி