பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

9

வைக்கிறேன் இதற்குச் சம்மதமா?” என்று கேட்டான். கொடூரமான இந்த நிபந்தனைக்குச் சற்றும் தயங்காமல் சரி என்று தலையசைத்த மகாநாமர் “அப்படியே ஆகட்டும்” என்றார். கொலைத் தொழில் நிறுத்தப்பட்டது. மகாநாமர் நகர்ப்புறத்திலுள்ள ஓர் ஆழமான குளத்தில் அரசன் கண் முன்பே குதித்து அமிழ்ந்து போனார்.

இதையறிந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதையும் மறந்து பதைபதைத்து நீரில் மூழ்கிய அந்த ஞானியைக் காணக் கூடினர். அரசனும், ஏனையோரும் அவர் மேலே வருவதை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர். ஆனால் நேரம் சென்று கொண்டு இருந்ததே தவிர மகாநாமர் மேலே வரக் காணோம். நீண்ட நேரம் காத்திருந்த அரசன் சலிப்பும் சினமும் அடைந்து தன் படைவீரர்களைக் குளத்தில் இறங்கித் தேடக் கட்டளையிட்டான். தன் இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் மூழ்கி இறந்து விட்ட மகாநாமரின் உடலை வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அதைக் கண்ட அரசன் திடுக்கிட்டான். மக்களைக் காக்கும்