பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

பொருட்டுத் தன் இன்னுயிரைத் துச்சமென ஈந்த அந்த குருநாதரின் புன்னகை புரியும் ஒளி நிறைந்த முகத்தை உற்று நோக்கினான். மக்கள் கூக்குரலிட்டனர்; கதறித் துடித்தனர்.

“குருவையே கொன்ற விட்ட மகாபாவி” எனச் சாடினர். விடூபன் தலை குனிந்தவாறு தன் கொடிய செயலுக்கு வருந்தி அவ்விடம் விட்டு அகன்றான்.

தியாகத்தை மிஞ்சிய சுகம் எது எனச் செயலில் செய்து காட்டிய மகாநாமரை நாம் நினைவில் கொண்டு அவ்வழி நடப்போம்.