பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


“ஐயா, நானோர் ஏழை பிராமணன். புரோகிதம் செய்வது தான் என் தொழில். அதில் வரும் சொற்ப வருமானம், என் பெண்ணும் நானும் அரைவயிறு உண்ணத்தான் போது மானதாய் உள்ளது. தாயற்ற என் ஒரே பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டேன். ஆனால் திருமணம் நடத்தப் பலரிடம் கடன் கேட்டும் பயனில்லை. ஓரிருவர் தங்களின் பெயரைக் கூறித் தாங்கள் நிச்சயம் உதவுவீர்கள் என்றனர். ஆதலால் நம்பிக்கையுடன் இங்கே வந்தேன். கருணையோடு என் மகளின் திருமணம் நடக்க உதவ வேண்டும்” என்றார்.

“அப்படியே, ஆகட்டும்! உங்கள் பெண்ணின் திருமணத்திற்குச் செலவுத் தொகை எவ்வளவு ஆகும் எனக் கூறுங்கள்!” என்றார் மோதிலால்.

ஓரிரு நிமிடங்கள் யோசித்த புரோகிதர் “சுமார் ஒரு முந்நூறு ரூபாய் தேவைப்படலாம்” என்றார்.

இதைக்கேட்ட மோதிலால் தமது உதவியாளரிடம், “இன்றைக்கு நம் கட்சிக்காரரிடமிருந்து எவ்வளவு பணம் வருகிறதோ அதை இவருக்குக் கொடுத்து விடுங்கள்”