இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. மதிப்பு
அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதிக் கான தேர்தலில் ஆப்ரஹாம் லிங்கன் என்பவரும் போட்டியிடுகின்றார். அவரது உருவப்படத்தை எல்லா நாளிதழ்களும் பிரசுரித்திருக்க எதேச்சையாக, பத்து வயது மதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியும் அதைப்பார்க்க நேர்ந்தது.
அழகு என்பது சிறிதுமற்று நீண்ட முகமும் குழிவிழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களுமாக இருந்த அந்தப் படத்தைப் பார்த்த அச்சிறுமி, தன் கையிலிருந்த பென்சிலால் அவரின் படத்துக்குத் தாடியை