பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

வரையத் தொடங்கினாள். அப்பொழுது அப்படம் அழகாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அதை அவருக்குத் தெரிவிக்க விரும்பி உடனே ஒரு கடிதம் எழுதினாள்.

“உயர்திரு. ஆப்ரஹாம் லிங்கன் அவர்களுக்கு வணக்கம்.

ஐயா, என் வயது பத்து. என் பெயர் கிரேஸ் பேடல். தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நாளிதழ் மூலமாக அறிந்தேன். தங்களிடம் எனது சிறிய வேண்டுகோள் ஒன்று. நீங்கள் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே! அப்படி நீங்கள் தாடி வைத்துக் கொண்டால் என் மீது மிக்க அன்பு கொண்ட என் குடும்பத்தினர் அனைவரையும் தங்களுக்கே வாக்களிக்கும்படி கூறுவேன். நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”.

இக்கடிதம், ஆப்ரஹாம்லிங்கன் செயலர்களிடம் சர்ச்சையை எழுப்பியது. மிக முக்கியமான கடிதங்களை மட்டுமே ஆப்ரஹாம் பார்வைக்குக் கொடுக்கப்படும். ஆதலால் இந்தக் கடிதம் அர்த்தமற்றதும் தேவையற்றதும்