பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

ஆகும் என்று ஒருவரும், அதை லிங்கனே தீர்மானிக்கட்டும் என்று ஒருவரும் வாதிட்டனர். முதலில் அது லிங்கனின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதைப் படித்த அவர் உடனே பதில் அனுப்பினார்.

“அன்புமிக்க என் சின்னஞ்சிறு சிநேகிதிக்கு நல்வாழ்த்துக்கள்... நான் தாடிவைக்க வேண்டும் என்ற உன் விருப்பம் விசித்திரமாக இருந்த போதிலும், உன் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.

இப்படிக்கு
ஆப்ரஹாம் லிங்கன்”

பிறகு நடந்த தேர்தலில் அதிக வாக்குகளோடு லிங்கன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்ல இரயில் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அது கிரேஸ் பேடலின் ஊரான வெஸ்ட்பீல்டின் வழியாகத்தான் செல்கிறது என்பதை அவர் அத்தனை அலுவல்களுக்கு மத்தியில் தெரிந்து கொண்டார். அங்கு அவரைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம் வெள்ளம் போல் அலைபாய்ந்தது.