பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

19

ஆனால் இரயில் நிற்க அங்கு அனுமதிக்கப்பட்டது சொற்ப நிமிடங்களே. கிரேஸ் ஜனாதிபதியான தன் நண்பரைக் காண ஆவலோடும் ஆசையோடும் தந்தையின் துணையோடு வந்திருந்தாள். அவள் கண்கள் அவரைத் தேடின. கண்ணுக் கெட்டிய துாரம் வரை தெரியும் மனிதத் தலைகள் அவள் அவரைக் காண முடியாது என்பதை உணர்த்தின. அவள் கண்களில் நீர் நிறைந்தது. திடீரென ஒரு குரல் ஒலித்தது “எனதருமை மக்களே! உங்கள் அனைவரையும் காண்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சொற்பொழிவு நடத்த எனக்கு நேரமில்லை. உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். இவ்வூரைச் சேர்ந்த கிரேஸ் பேடல் என்ற சிறுமி என்னைக் காண வந்திருப்பாள். என் வெற்றிக்கு உதவிய அச்சிறுமியை பார்க்க எனக்கு உதவுங்கள்” என்றார் லிங்கன்.

ஏமாற்றத்தோடு வீடு திரும்ப எண்ணிய கிரேஸ், இதைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சியோடு “நான் இங்கே இருக்கிறேன்” எனக் கூவினாள். மக்கள் அவசரமாக அவளுக்கு வழிவிட்டனர். லிங்கன் அவளை அன்போடு