பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

எடுத்து முத்தமிட்டார். அவளின் கைகள் அவரின் தாடியை வாஞ்சையுடன் தடவின. “உன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் என் சின்னஞ்சிறு சிநேகிதியே. உனக்கு மிக்க மகிழ்ச்சிதானே! இன்னொரு முறை நான் இங்கு வந்து நிச்சயமாக உன்னைச் சந்திப்பேன்” எனக் கூறி கிரேஸைக் கீழே விட்டபோது பேச்சிழந்து கண்ணீரோடு கையசைத்து விடை கொடுத்தாள்.

இதைக் கண்டு மக்கள் வியந்தார்கள். ஜனாதிபதியான ஒருவர் ஒரு சிறு பெண்ணுக்குக் கொடுத்த மதிப்பு அவர்களின் மனத்தில் லிங்கனை மேலும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றது.