பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




5. பொறுப்பு


‘கனடா’ - என்ற நாட்டில் எட்மெளண்டன் என்ற நகரத்தில் மேயராக ஐவேர்டெண்ட் என்பவர் இருந்தார். அவரது அலுவலகம் பல மாடிக் கட்டடத்தின் இரண்டாம் அடுக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் அலுவலகம் செல்ல அங்கிருந்த லிப்டின் உள்ளே நுழைந்தார். அவரைப் பின்பற்றி வந்த ஒரு பெண், உள்ளே இருப்பவர் யார்? எவர்? என அறியாமல் ஏதோ சிந்தனையோடு “ஏழாவது மாடிக்கு” என்றாள் அதிகார தோரணையோடு.

மேயர் பதிலேதும் கூறாமல் ஏழாவது மாடிக்கு லிப்டை இயக்கினார். அங்கு அந்தப்