பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

பெண்ணை விட்டுவிட்டுத் திரும்புகையில் அங்கிருந்த சிலர் லிப்டின் உள்ளே வந்து “முதல் மாடிக்கு” என்றனர். முதல் மாடியில் அவர்களை இறக்கிவிட்டு இரண்டாவது மாடியிலிருக்கும் தன் அலுவலகம் வந்து வேலையைத் தொடங்கினார்.

இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். டெலிபோன் மணி ஒலிக்க எதிர்முனையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் “ஹலோ மேயர் அவர்களே நான் ஏழாவது மாடியில் அரை மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ‘லிப்ட் பாய்’ லிப்டை மேலே கொண்டு வரவில்லை. அவனைக் கொஞ்சம் எச்சரிக்கை செய்யுங்கள்” என்றது.

மேயர், “அப்படியே ஆகட்டும் அம்மணி” என்றவர், தம் அலுவல்களை அப்படியே நிறுத்திவிட்டு வெளிச்சென்று லிப்டை ஏழாவது மாடிக்கு இயக்கினார். மாடியில் காத்திருந்த பெண்மணி காலையில் லிப்டில் வந்த பெண்மணியே! மேயரைக் கண்டதும் அவள் கோபத்துடன் கூச்சலிட்டாள். “என்ன வேலை பார்க்கிறாய் நீ? பொறுப்பற்ற உன் போன்றவர்களால் எங்கள் நேரம் எல்லாம்