பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்




6. மனிதன்

தேவர்களின் சபை கூடியிருந்தது. எப்பொழுதும் மகிழ்வோடு வீற்றிருக்கும் சபைத் தலைவன் தேவேந்திரன் இன்று ஆழ்ந்த சிந்தனையுடனும் கவலையுடனும் காணப்பட்டான்.

தலைவனுக்கு என்னவாயிற்று? தங்களுக்குத் தெரிந்து இன்று எந்தத் துர்ச்சம்பவமும் நிகழவில்லையே? அப்படியிருக்க இவன் கவலை எதைப் பற்றியதாக இருக்கும்? என்ற கேள்வி அங்கு கூடியிருந்தோர் அனைவரின் மனத்திலும் எழ, ஒருவர் எழுந்து, “தேவேந்திரா! படைப்புத்