பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

27

தொழிலை மிகச் சிறப்பாகச் செய்யும் உனக்கு இப்படிக் கவலைப்படும்படி என்ன நேர்ந்தது? அப்படி ஏதேனும் இருந்தால் நாங்கள் உனக்கு உதவலாமே!” எனக் கேட்டார்.

தேவேந்திரன் சபையினரை ஒருமுறை ஏறஇறங்கப் பார்த்து, “அது அவ்வளவு சுலபமான விசயம் அல்ல! நான் இரவு முழுவதும் தூக்கமின்றி யோசித்து விட்டேன். ஆனால் விடை என்னவோ கிடைப்பதாக இல்லை!” என்றான்.

“அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நாங்களும் உன்னோடு உன் கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்!” என்றனர்.

“மனிதனை நம்போல் தேவர்களாக்கும் அரும்பெரும் இரகசியத்தை அவன் அறியாமல் புதைத்து வைக்க வேண்டும். ஆனால், அதை எங்கே? எப்படி? புதைப்பது என்பது தான் இப்போதைய குழப்பம்!” என்றான் தேவேந்திரன்.

"அட இவ்வளவு தானா! இதற்குப்போய் இப்படிக் கவலைப்படலாமா? இமயமலை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது? அதன்