பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

உச்சி மீது இந்த இரகசியத்தை புதைத்து விட்டால் பிரச்சனை முடிந்தது!” இந்திரன் இதைச் சொன்னவரைக் கேலியாகப் பார்த்து “ஐயா, நீர் எந்த உலகில் இருக்கிறீர்? மனிதன் சந்திர மண்டலத்தின் மீது சவாரி செய்கிறான். அவனுக்கு இமயமலையெல்லாம் ஒரு பொருட்டா? உருப்படியாக ஏதாவது சொல்லுங்கள்”, என்றான் சலிப்பாக.

மற்றொருவர் எழுந்து “ஏழு கடல்களுக்கு அடியில் அதைப் புதைக்கலாமே! அங்கே மனிதன் எதற்காக, எப்படி? செல்வான்” என்றார்.

இந்திரனுக்கு இப்போது கொஞ்சம் கோபம் வந்தது. “மனிதன் கடலுக்கு அடியில் இருக்கும் தரையையே புகைப்படம் எடுக்கிறான். அவன் கண்களுக்கு ஏதாவது தப்பித் தவறிப் போனாலும், புகைப்படம் அதை தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடும் ஐயா!” என்றார்.

இன்னும் ஒருவர் எழுந்தார். “நான் இப்போது சரியாகச் சொல்கிறேன். விலங்குகள் - அதாவது கொடிய விலங்குகள் வாழும் குகையில் அதை மறைத்து வைக்கலாம். உயிருக்குப் பயந்து மனிதன் அங்கே வந்து தேடமாட்டான்” என்றார்.