பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

7. மரணம்

 

ழை மனிதன் ஒருவன் புத்தரை விருந்துக்கு அழைத்திருந்தான். அவனால் வேறு எதுவும் வாங்க முடியாத நிலையில் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்ட (காளான்) நாய்க்குடைகளை எடுத்துச் சமைத்திருந்தான்.

அந்த உலர்ந்த நாய்க் குடைகள் விஷமாகிவிட்டிருந்தவை. புத்தர் அதைச் சுவைக்கும்போதே கசப்பாய் இருந்தது. ஆனால் அந்த ஏழை விசிறியால், விசிறியவாறு ஆனந்தக் கண்ணீர் சொரிய, நின்று கொண்டிருந்ததைப் பார்த்த புத்தர் எதுவும் கூறாமல் உண்டு முடித்துவிட்டார். அது மிகவும் கடுமையான விஷம்.