பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

33

அவர் தன் இருப்பிடம் திரும்பியதும் நினைவை இழந்து விழுந்து விட்டார். வைத்தியர்கள் இனி பிழைப்பது சாத்யமில்லை எனக் கூறி விட்டனர்.

அந்தப் பேதை மனிதன் “அது கசப்பாய் இருந்தது என்று ஏன் கூறவில்லை சுவாமி” என அரற்றி அழுது புரண்டான்.

சிறிதளவு நினைவு வந்தபோது புத்தர், “உன் கண்களில் ஆனந்தத்தைக் கண்டேன். நாய்க் குடையின் கசப்பையும் கண்டேன், என் இரத்தத்தில் பரவும் விஷத்தையும் கண்டேன், என்னை அணுகி வரும் மரணத்தையும் கண்டேன். பிறகு நான் நினைத்தேன். மரணத்தை யாரும் தடுக்க முடியாது. இன்றில்லாவிட்டால் நாளை அது வந்தே தீரும். ஆதலால் நாய்க்குடை கசப்பாக இருந்தால் அதன் மீது வெறுப்பு ஏன்?

இன்றில்லாவிட்டாலும் நாளை வரும் மரணம். இந்தச் சிறிய விசயத்திற்காக உன் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் பறிப்பவனாக நான் ஏன் ஆகவேண்டும்? நான் கசப்பு எனக் கூறியிருந்தால், உனது மகிழ்ச்சி கசப்பாக மாறியிருக்கும். ஆகவே நான் பூரணமாக ஆனந்தமடைந்தேன்” என்றார்.