இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. இரத்தினக்கல்
பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அசோகச் சக்ரவர்த்தி மகத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. மிகச் சிறந்த வீரரான அவர் அண்டை அயல் நாடுகளையெல்லாம் போரிட்டுக் கைப்பற்றித் தன் இராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தார். அப்படி வெற்றி பெற்ற நாடுகளிடம் கிடைத்த வைரம், வைடுரியம், நவரத்தினம் எனப் பல்வேறு விதமான கற்களை ஏராளமாகச் சேகரித்துத் தன் கஜானாவில் நிரப்பி இருந்தார். தான் சேகரித்து வைத்திருந்த அளவு அழகிய விலையுயர்ந்த கற்கள் வேறு எங்கும் இருக்கவில்லை என்ற