38
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
இறுமாப்பும் அவரிடமிருந்தது. ஒரு நாள் புகழ்பெற்ற பௌத்தத் துறவி ஒருவர் அரண்மனைக்கு வருகை தந்தார். அவரிடம் நீண்ட நேரம் பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்த அரசன் தன் கஜானாவில் சேகரித்து வைத்திருக்கும் கற்களையும் காட்டத் தவறவில்லை.
“சுவாமி! நீங்கள் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒளிவீசும் கற்களை எங்காவது கண்டதுண்டா?” எனப் பெருமிதத்துடன் வினவினார். துறவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. “ஆம் அரசே! இதை விட விலை மதிக்கமுடியாததும் பல மடங்கு பெரியதுமான கல்லைப் பார்த்திருக்கிறேன்” என்றார் துறவி. அரசரால் நம்ப முடியவில்லை. “அப்படியா சுவாமி! நான் உடனே அதைப் பார்த்தாக வேண்டும். அது எங்கே இருக்கிறது எனச் சொல்லுங்கள்” என்றார். “அதிக தூரம் ஒன்றுமில்லை அரசே. இதோ உன் நாட்டின் எல்லையில்தான் இருக்கிறது. இப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்”.
சக்கரவர்த்தி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்ன! என் நாட்டிலா? இதைவிடப்