பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

39

பெரிய கல்லா? இருக்க முடியாது! அதுவும் நான் அறியாமல் இருக்கவே முடியாது” என்றார். “நான் அதை உனக்கு இப்போதே காட்ட முடியும். நாம் போவோம் வா!” என அரசரோடு புறப்பட்டு விட்டார் துறவி.

ஊரின் எல்லை வந்தது. அங்கு அரண்மனைக்குச் சொந்தமான ஒரு சத்திரத்திற்குள் துறவி புகுந்தார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. துறவியைப் பின்பற்றினார். தானியம் அரைக்கும் மிகப்பெரிய கல் ஒன்று அங்கு போடப்பட்டிருந்தது. வழிப்போக்கர்கள் தங்கும் போது மாவு அரைத்து உணவு தயாரிப்பதற்காகப் போடப்பட்ட கல் அது. துறவி அதைச் சுட்டிக் காட்டி “அரசே! பார்த்தாயா, உன்னிடம் இருக்கும் கல்லை விட இது எத்தனை மடங்கு பெரியது என்று?” “அரசனுக்குச் சினம் பொங்கியது. சுவாமி! என்ன, என்னைக் கேலி செய்கிறீரா? மாவு அரைக்கும் இக்கல் எங்கே? விலை மதிப்பற்ற அந்தக் கல் எங்கே? என்ன நினைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்” என்றான் கோபத்தோடு, “இல்லை அரசே! நான் உண்மையைத் தான் சொல்கிறேன். உன் மூதாதையர் காலந்தொட்டு இந்தக்கல் இங்கே