இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. இருளும் ஒளியும்
முன்னொரு காலத்தில், ஓர் அரசனுக்கு நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. பிற்காலத்தில் அருமையான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரண்மனையில் குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரலாயிற்று. குழந்தை வளர வளரக் கூடவே மட்டுமிதமற்ற துடுக்குத்தனமும் வளரத் தொடங்கிற்று. ஓடுவது, தாண்டுவது, குதிப்பது போன்ற விளையாட்டுகளில் மிக அதிகமாக ஈடுபட்ட காரணத்தினால், ஒருநாள் சிறுவனுடைய கால் இடறி விழுந்து சரிப்படுத்த இயலாத அளவு ஊனமடைந்து விட்டது.