பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

43

அதனால், அவன் குந்திக் குந்தி நடக்க நேர்ந்தது. ஊனமுற்ற குழந்தையைப் பார்த்துப் பார்த்து ஈன்றோர் உளம் வருந்தினார்கள்.

தைமூர்லங்க் என்ற பெயருடன் ஊனமுற்ற அந்த அரச குமாரன், பிற்காலத்தில் தேசத்துக்கு அதிபதியானான். ஆயினும், அவன் உள்ளமோ ஊனமடைந்து விட்டிருந்தது. எனவே, உள்ளமும், உடலும் ஊனமில்லாத நல்ல மனிதர்களைக் காணும்போது அவனுடைய உள்ளத்தில் குரூர குணம் உண்டானது. ஒவ்வொரு நாளும் சேவகர்களைவிட்டு நல்ல மனிதர்களைப் பிடித்துக் கொண்டு வரச் செய்து குற்றவாளிகளைப் போன்று தன் முன் நிறுத்தி மனிதத் தன்மைக்குச் சிறிதும் ஒவ்வாத குற்றங்களைச் சுமத்தி அவர்களைத் தண்டித்து அவன் மன மகிழ்ச்சி அடைந்தான்.

மனிதத் தன்மையை அறவே இழந்துவிட்ட இந்த மாபாவி மன்னனுக்கு, தகுந்ததாக எதிர்காலம் என்ன வைத்துக் கொண்டுள்ளதோ அளிப்பதற்கு! இறந்தகாலம் இவனுக்குத் தகுதியான வரலாறு எப்படி எழுதப் போகிறதோ? அதை நாம் அறியோம்.

வழக்கம்போல, அன்றைய நாள், மிகவும் துக்ககரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது.