பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


மலரும் வாழ்வும்!


அது ஓர் அழகான மணம் பரப்பும் மலர்
ஒரு நாள் காலையில் மலர்ந்தது
கொஞ்ச நேரம் மகிழ்ந்தது, பிறகு
மெல்ல, மெல்ல வாடியது,
காற்று வீசியது,
மலர் உதிர்ந்தது.
வாழ்க்கை என்பதும் அம் மலர்
போன்றதே!
அம்மலர் தான் வாழும் காலம்
வரை தன்
நறுமணத்தை எங்கும் பரப்பியது.
காற்று மரணத்தைக் கொடுத்த போது
மகிழ்வோடு ஏற்றுக் கொண்டது!
இது தான் வாழ்க்கை.
இது தான் மரணம், பின்
அழுது புலம்புவது எதற்காக? -கன்னடக் கவிதை

இத்தொகுப்பில் உள்ள கர்நாடகக் கதைச் சிற்பிகளின் பெயர்களை அறியாத போதும் நன்றிகள் அவர்களின் பணிக்காக!

- மறைந்த கவிஞர் வெள்ளியங்காட்டான்

“அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில், உருவிலா மணமிலாப் பூக்கள் பல பூத்து, வாடி, மண்ணோடு மண்ணாக மக்கி எருவாகி இருக்கவேண்டும். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. முன் பூத்து வாடிய மலர்களே இப்போதுள்ள கதைகளுக்கு உரமாகி விடுகின்றன. நம்முடைய சாரமற்ற கதைகளே இனிப் பூக்கும் வாடாத மலர்களுக்கு எருவாகி விடுகின்றன”.

இவ்வமுத வாக்கியம் ஒரு அறிஞரின் சிந்தனை.